வெள்ளி, 14 ஜனவரி, 2011

add your blogger blog to search engine - google site map

வருகைக்கு நன்றி!



நாம் நமது வலைப்பதிவை பிரபலபடுத்த இன்ட்லி, தமிழ்மணம், தட்ஸ் தமிழ் போன்ற திரட்டிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என  நிறைய வழிகள் இருக்கிறது. இது போல மேலும் நிறைய வாசகர்கள் வர வழிவகை செய்வது தேடுபொறிகள். எனவே உங்கள் வலைபதிவிற்கு கூகிள் சைட் மேப் இணைத்து கூகிள் தேடுபொறியின் தேடல் முடிவுகளில் இடம் பெறுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

1. முதலில் உங்கள் பிளாக்கர் அடைப்பலகைக்குள் (dashboard) நுழைந்து கொள்ளுங்கள். பிறகு அடைப்பலகையின் அடிப்பகுதியில் உள்ள Webmaster tools என்ற லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.
                                    
                                                (அல்லது)

www.google.com/webmasters/tools என்ற முகவரிக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து உள்நுழையவும். பிறகு அங்குள்ள Add a site என்ற லிங்க்கை க்ளிக் செய்து தோன்றும் விண்டோவில் உங்கள் வலைப்பதிவின் முகவரியை தட்டச்சு செய்து Continue என்பதை க்ளிக் செய்யவும். {ex: www.yourdomain.blogspot.com}

google site mape home page

2. அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Add a site map to your site's home page என்பதற்கு முன் டிக் குறியிட்டு கீழே தோன்றும் Meta tag ஐ காப்பி செய்து கொள்ளவும்.



3. பிறகு உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொண்டு Design - Edit HTML சென்று Expand Widget Template என்பதற்கு முன் டிக் குறியிட்டு <head> என்ற வரியை கண்டுபிடித்து அதற்க்கு பின் காப்பி செய்த Meta tag ஐ பேஸ்ட் செய்யவும்.

[ குறிப்பு: உங்களது வார்ப்புருவில்  (Template) திருத்தம் மேற்கொள்ளும் ஒவ்வொருமுறையும் Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்களது வார்புருவை தரவிரக்கிகொள்ளவும். உங்களது வார்புருவை திருத்தல்களுக்கு பின் சேமிக்க முடியவில்லையெனில் பழையபடி மீட்டெடுக்க உதவும். ]






Meta tag ஐ பேஸ்ட் செய்த பின் Save Template என்பதை க்ளிக் செய்து சேமித்துக்கொள்ளவும்.

4. பிறகு Google Webmaster central சென்று Verify என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.


5. அடுத்து தோன்றும் பக்கத்தில் Submit a sitemap என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்.


6. தோன்றும் பக்கத்தில் Submit a sitemap என்ற பொத்தானை க்ளிக் செய்து தோன்றும் விண்டோவில்
atom.xml?redirect=false&amp;start-index=301&amp;max-results=500

இநத வரியை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிட்டு Continue என்பதை க்ளிக் செய்யவும். அவ்வளவுதான் முடிந்தது.

கடைசியாக உங்கள் பதிவின் சைட் மேப் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்ற செய்தி வரும்.
படத்தில் உள்ளதைப்போல.


பதிவு பிடித்திருந்தால் அல்லது பயனுள்ளதாக இருந்தால் மேலும் சந்தேகம் இருந்தால் கருத்துரை மூலம் தெரிவிக்கவும்.
                                                                   நன்றி!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக